உன் தாவணி....



ஊரெங்கும் சுட்டெறிக்கும் வெயில்
எங்கிருந்தோ ஒரு தென்றல்
உரசிச் சென்றது
திரும்பிப் பார்த்தேன்
அவளின் தாவணி.

உன் தாவணிகள்
ஏன் இவ்வளவு அழகாயிருக்கிறது தெரியுமா?...
நீ எந்த வண்ணத்தில் உடுத்திருந்தாலும்
நீ பூசுகிற வெட்கத்தின் வண்ணத்தை
அணிந்து கொள்கின்றன!!!...

இறுகக் கட்டியிருக்கிறாய் என்பதால் மடடுமல்ல
உன்னை கட்டியிருக்கிறோம்
என்கிற கர்வத்தில்
அழகாயிருக்கிறது தாவணி...

பாவாடை தாவணியில் வெளியே வரும்பொழுதில்
அவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிறாயா
கவலையை விடு
உன்னை தழுவுகிற சுகத்தை விட்டு
அவை நழுவி விடமாட்டா...

உன்னைத் தீண்ட முடியாத கோபத்தில்
காற்று தாவணியோடு மல்லுக்கட்டுவதைப்பார்த்து
புன்னகைக்கிறது உன் கூந்தல் பூக்கள்
அவையிரண்டையும் பார்க்கையில்
தவிக்கும் என்னைப்பார்த்து
குறும்பாக சிரிக்கிறது
என் காதல்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment