" வைரமுத்துவின் " காதலித்துப்பார்.........






Blog Poster
Blog Poster

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நான் ரசித்த கவிதைகள்........
























  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இதற்க்கு பெயர்தான் " வெட்கமோ ".......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

மற்றொரு ஹைக்கூ.....



அருவி
---------
விழுந்தாலும்
எழுந்து ஓடுகிறது
நம்பிக்கை.

சூரியனே!
-------------
இத்தனை ஆண்டுகள்
எரிந்தும் தீரவில்லையே
எரிபொருள்.

பூமி
-----
பிரபஞ்சத்தின்
சின்னஞ்சிறிய
சோதனைக் கூடம்.

வானம்
---------
சிந்தனைக்கு
அப்பாற்பட்ட
அற்புத இடம்.

மழை
-------
எச்சில் தெறிக்க
சத்தம் போட்டு அழுகிறது
மேகம்.

சூரியக் குடும்பம்
----------------------
யாருடைய
பையிலிருந்து விழுந்த
கோலி குண்டுகள் இவை

பிச்சைக் காரர்
-------------------
அருவருப்பு, வெட்கம்
துறந்த ஒருவகைத்
துறவிகள்.

மருத்துவர்
-------------
கண்ணுக்குத் தெரிந்த
கடவுள்கள் - வழக்கம்போல்
காசு வாங்கிக் கொண்டு.

நோய்
--------
உடலையும், உடனுள்ளோர்களையும்
உணர்ந்து கொள்வதற்கான
உன்னத வழி.

கனவு
-------
சேகரிக்க மறந்த
சம்பவங்களின்
தொகுப்பு.

கற்பனை
-----------
நிதர்சனங்களை
ஓரந்தள்ளினாலும்
ஒரே மகிழ்ச்சி.

பணம்
--------
கையடக்க
வயிற்றை நிரப்புவதற்கான
வாழ்க்கைப் போராட்டம்.

பூட்டு
-------
மனித குலத்தில்
முளைவிட்ட
முதல் சாபம்.

சாவி
------
சுயநலத்தின்
சின்னஞ்சிறிய
ஆதாரம்.

விஞ்ஞானம்
---------------
அழிவையும்
அணுகிக் கொண்டிருக்கும்
அற்பப் பயணம்.

குழந்தை
-----------
மதம், சாதி
மற்றுபிற திணிக்கப்பட்டதை
அறியாத பிஞ்சு.

மரணப் படுக்கை
----------------------
மறந்துவிட்ட
கடமைகளை
நியாபகப் படுத்தும் தருணம்.

விவாதம்
-----------
முடிவுகளைத்
திணிக்க முயலும்
அமைதிப் போராட்டம்.

விவாகம்
-----------
கடமைகளைத்
திணிக்க முயலும்
அன்புப் போராட்டம்.

காதல்
-------
மனங்களின் இணைப்பு
சில சமயம்
மதங்களின் உடைப்பு.

சொத்து
----------
சந்ததியை
சோம்பேறியாக்கும்
சேமிப்பு.

குடும்பம்
------------
உலகின் விருந்தாளியை
சொந்தம் கொண்டாடும்
சில உள்ளங்கள்.

கடமை
---------
நாமாக
ஏற்றுக்கொண்ட
கட்டாய வலி.

ஆடை
----------
குளிர் காக்க
வந்து மானம் காக்கவென
உருமாறிய பொருள்.

தீர்ப்பு
--------
சமுதாயத்தின்
அளவுகோல்களுக்குள்
அடைக்கப்பட்ட ஞாயம்.......


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சுய சோதனை.......




உங்கள் தொழலில் அல்லது வேலையில் நீங்கள் வளர்ச்சி அடைய வேண்டுமா? என்று
கேட்டால் அனைரும் “ஆமாம்” என்றுதான் கூறுவார்கள். வளர்ச்சி அடைய வேண்டும்
என்றால் உங்களைப் பற்றியும் ,உங்கள் தொழிலில் அல்லது வேலையில்
உங்களுக்குள்ள “பலம்,பலவீனம்” பற்றி தெரியுமா? இதைக்கேட்டால்
பெரும்பாலோர் ஓரளவு தெரியும் என்றும் கூறுவர்.
நீங்கள் வாழ்வில், தொழிலில், கல்வியில், பணியில் எதில் முன்னேற வேண்டும் என்றாலும் அதைப்பற்றிய சுய சோதனை அவசியம்.
ஏன்?
சுய பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவம், நாம் எங்கு இருக்கிறோம்
(எந்த நிலையில்) இது போதுமா? முன்னேற்ற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்
என்பதைக் கண்டுகொள்ள உதவும். எங்கு இருக்கிறோம் என்பதைத்
தெரிந்துக்கொண்டால்தான் எங்கு செல்ல வேண்டும் என்ற இலக்கினை நிர்ணயிக்க
முடியும்.
பலம்
நீங்கள் ஈடுபட்டுள்ள விஷயங்களில் அதன் நேர்மறையான மாற்றத்திற்கு,
முன்னேற்றத்திற்கு உதவிடும் வகையில் உள்ள உங்களது திறமைகள் உங்களது பலம்.
உதாரணமாக அழகான கையெழுத்து, நல்ல நினைவாற்றல் போன்ற திறமைகள் படிப்பில்
நல்ல மதிப்பெண்பெற ஒரு மாணவனுக்கு இருக்கின்ற பலம். இதைப் போலவே பேச்சுத்
திறமை எளிமையாக மக்களுடன் பழகுகிற திறமை, பலரை தெரிந்து வைத்திருத்தல்
(வெகுஜனத் தொடர்பு) இன்சூரன்ஸ் கம்பெனி போன்றவற்றில் பணிபுரிவோருக்கு
சிறந்த பலமாகும்.
பலவீனம்
முதலில் உங்கள் பலம் எது என்பதை அறியாமல் இருப்பதே, உங்களுடைய பலவீனம்.
நீங்கள் ஈடுபட்டுள்ள துறையில் உஙளது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ள
எந்த ஒரு விஷயமும் பலவீனம்தான்.
பத்தாம் வகுப்பு அல்லது பனிரெண்டாம் வகுப்பில் பயிலும் மாணவன்
பொதுத்தேர்வினை சந்திக்கப் போகும் மாணவன் தனது நேரத்தினை தொலைக்காட்சி
பார்த்தோ வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதோ அவனுக்குள்ள
பலவீனம். இந்த செயல்கள் அவன் பொதுத்தேர்வில் எடுக்க வேண்டிய
மதிப்பெண்களைப் பாதிக்கும் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.அவன்
உழைப்பு அவனது முன்னேற்ற அறிக்கையில்தான் (Progress Report) முன்னேற்ற
அறிக்கை அட்டை மாணவர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் மிகவும் அவசியம்.
ஏன் புதிய தொழிலில் ஈடுபடுவதில்லை
சமீபத்தில் இளைஞர் குழுவினருடன் தன்னம்பிக்கை குறித்த பயிற்சியின்
போது, ஒரு இளைஞர் தனது மீன் வளர்ப்பு தொழில் எப்படி நடைபெறுகிறது என்பதை
விளக்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து விவாதம் ஆரம்பிக்கும் முன்பே
மற்றொரு இளைஞர் “போட்ட முதல் எப்போ டபுளாகும் (இரட்டிப்பாகும்)” என்று
தெரிந்துகொள்ள ஆர்வமாக கேள்விகள் கேட்டார். ஒரு தொழிலின் ஆரம்பத்திலேயே
அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருப்பினும் முதலீட்டினை
இரட்டிப்பாக்கி லாபம் ஈட்டிவிடவேண்டும் என்பதே பெரும்பாலான இளைஞர்களின்
எண்ணமாக இருக்கிறது.
இந்த உடனடி (லாட்டரி போன்ற ) லாபம் என்ற எண்ணம்தான் நம்மால் புதிய தொழில் தொடங்க இயலாத நிலைக்குக் கொண்டு செல்கிறது.
இதுவே புதிய தொழில் தொடங்க இயலாமைக்கு பெரும்பாலான இளைஞர்களுக்கு உள்ள பலவீனம்.
மேற்படி விஷயத்தை எப்படி பலமாக்கிக் கொள்வது?
ஒரு தொழில் ஆரம்பிப்பது என்பது லாபம் பெறதான் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் உடனடியாக லாபம் மற்றும் அதிகமான லாபம் என்ற எண்ணம்தான்
பிரச்சனைக்குரியது. நமது எச்சரிக்கை குணத்தினை புதிய தொழில் பற்றிய
அனைத்து தகவல்களையும் திரட்டுவதற்காக பயன்படுத்த வேண்டும்.
உதாரணமாக மீன் வளர்ப்புத் தொழிலை ஆரம்பிப்பதாகக் கொண்டால்,
அந்தத்தொழில் நல்ல முறையில் நடந்து கொண்டிருக்கின்ற இடத்திற்குச் சென்று
பார்வையிடுவதுட் முறையான பயிற்சியினைப் பெற்றுக்கொள்வது மேற்படிதொழிலில்
லாபம் வரா விட்டாலும், கையை சுட்டுக்கொள்ளாத நிலையில் நம்மை
வைத்திருக்கும் நஷ்டம் அடையாமல் ஒருதொழில் நடத்துவதே நமக்கு அனுபவம் என்ற
“பலத்தினை” கொடுக்கிறது. இந்த அனுபவ பலத்தினை வைத்தக்கொண்டு அத்தொழிலில்
முன்னேற வேண்டும்.
பலவீனங்களை அறிந்து அதை ஒவ்வொன்றாக நீக்கிக்கொடு வரவேண்டும்.
பலவீனங்களை அறிய ஒரு எளிய வழி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 1999-ல்
உங்களின் கல்வி,பொருளாதாரம், இருப்பிடம், மற்றும் உங்கள் நிலை (உதாரணமாக
நீங்க உடுத்தியுள்ள உடைகள், அணிந்திருக்கும் காலனி, ஆபரணங்கள் ஆகியவகள்
கூட உங்கள் முன்னேற்றத்தினை தெரிவிக்ககூடும்) என்ன என்பதை பட்டியல்
இடுங்கள். 2005 -ல் எப்படி இருக்கிறீர்கள். தேய்பிறையாகவா அல்லது வளர்
பிறையாகவா? பின்னடைவு ஏற்படிருந்தால்அதன் காரணங்கள் என்ன?இந்தக்
காரணங்கள்தான் நமது பலவீனங்கள். அவற்றை ஒவ்வொன்றாக நீக்க ஏற்பாடு செய்ய
வேண்டும்.
பலம் அடைய!
முதலில் நல்ல இலக்கினை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அந்த இலக்கினை அடைய
திட்டமிட்டு உழையுங்கள். தினமும் உங்கள் முன்னேற்றத்தினை தன்னம்பிக்கை
நாட்குறிப்பில் குறித்து வாருங்கள்.
1. நமது வளர்ச்சியினை பார்ப்பதே நமக்கு மிகப்பெரும் பலத்தினை தரும்.
2. நீங்கள் நிர்ணயித்துள்ள இலக்கு, அதனைச் சார்ந்த துறை குறித்த நல்ல நூல்களை படியுங்கள்.
3. முன்னேற்றத்தினை துரிதப்படுத்திக்கொள்ள அத்தொழில் சார்ந்த பயிலரங்குகளில் கலந்து கொள்ளுங்கள்.
4. உங்கள் துறை குறித்த பதுப்புது தகவல்களை தெரிந்துகொண்ட விஷயங்களை நடைமுறைப்படுத்துங்கள்.
5. தெரிந்துகொண்ட விஷயங்களை நடைமுறைப்படுத்துங்கள்.
6. வளமான வாய்ப்புகள் கிடைத்ததும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது
உங்கள் பலத்தினை அதிகரிக்கும்! ‘பலமே வாழ்வு’ என்ற விவேகானந்தரின்
பொன்மொழி உங்கள் வெற்றிக்கனிகளுக்கான வித்தாகும்........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அயல்தேசத்து கவிதை.......



மீண்டும் அயல்தேசத்திற்கு
தினமும் என்னை அழவைக்கும் கவிதை


தூக்கம் விற்ற காசுகள்
இருப்பவனுக்கோ வந்து விட ஆசை
வந்தவனுக்கோ சென்று விட ஆசை
இதோ அயல்தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ்!

விசாரிப்புகளோடும்
விசா அரிப்புகளோடும் வருகின்ற
கடிதங்களை நினைத்து நினைத்து
பரிதாபப்படத்தான் முடிகின்றது!

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால்...
வாசனைகள் இருக்கலாம்!
ஆனால் வாழ்க்கையில்...?

தூக்கம் விற்ற காசில்தான்...
துக்கம் அழிக்கின்றோம்!
ஏக்கம் என்ற நிலையிலே ...
இளமை கழிக்கின்றோம்!

எங்களின் நிலாக்கால
நினைவுகளையெல்லாம்...
ஒரு விமானப்பயனத்தூனூடே
விற்றுவிட்டு

கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே
கடல் தாண்டி வந்திருக்கிறோம்!

மர உச்சியில் நின்று
ஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!
வாரவிடுமுறையில்தான்..
பார்க்கமுடிகிறது
இயந்திரமில்லாத மனிதர்களை

அதையும் பறிக்கும் ஒவர்டைம்கள்

அம்மாவின் ஸ்பரிசம்
தொட்டு எழுந்த,அப்பாவின் திட்டுடன் எழுந்த நாட்கள்
கடந்து விட்டன!
இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன!

எவ்வளவு சம்பாதித்தும் என்ன?
நாங்கள் அயல்தேசத்து கவிதை......   

காற்றிலும் கடிதத்திலும்
வருகின்ற சொந்தங்களின்...
நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்

அரபிக்கடல் மட்டும்தான்...
ஆறுதல் தருகிறது!

ஆம்
இதயம் தாண்டி
பழகியவர்களெல்லாம்...
ஒரு கடலைத்தாண்டிய
கண்ணீரிலையே...
கரைந்துவிடுகிறார்கள்!


இறுதிநாள் நம்மிக்கையில்தான்...
இதயம் சமாதானப்படுகிறது!

இருப்பையும் இழப்பையும்
கணக்கிட்டுப்பார்த்தால்
எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...

பெற்ற குழந்தையின்
முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு...
முதல் பார்வை... முதல் கழிவு...
இவற்றின் பாக்கியத்தை
றியாழும் தினாரும்
தந்துவிடுமா?

கிள்ளச்சொல்லி
குழந்தை அழும் சப்தத்தை...
தொலைபேசியில் கேட்கிறோம்!

கிள்ளாமலையே
நாங்கள் அழும் சப்தம்
யாருக்கு கேட்குமோ?

ஓவ்வொறு முறை ஊருக்கு
வரும்பொழுதும்...
பெற்றகுழந்தையின்
வித்தியாசப்பார்வை...
நெருங்கியவர்களின்... திடீர்மறைவு

இப்படி
புதிய முகங்களின்
எதிர்நோக்குதலையும்...
பழையமுகங்களின்
மறைதலையும் கண்டு...
மீண்டும்

அயல்தேசம் செல்லமறுத்து
அடம்பிடிக்கும் மனசிடம்...

தங்கையின் திருமணமும்...
வீட்டு கஷ்டங்களும்...
பொருளாதாரமும் வந்து...
சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறது
மீண்டும் அயல்தேசத்திற்கு...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆத்தி… இப்புடுச் சூடி!.......



அடிக்கடி எஸ்.எம்.எஸ். அனுப்பு
 
ஆசையை அப்ளிகேஷன் போடு

இங்கிலீஷில் பீட்டர் விடு

ஈமெயிலில் ஆட்டின் அனுப்பு

உம்மா உம்மம்மா பண்ணு

ஊரெல்லாம் உன் லவ்வை பரப்பு

எதுக்கெடுத்தாலும் கிரீட்டிங் அனுப்பு

ஏகப்பட்ட குதாம்ஸ் காட்டு

ஐஸ்க்ரீமா வாங்கிக் குடு

ஒன்ஸ்மோர் போலாமானு கேளு

ஓட்டல்களில் துட்டு அழு

ஒளவையாரா பிலிம் காட்டறாளா…

ஃபிகரை மொதல்ல மாத்து!.........



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்ணால் கண்ட காதல் சம்பவம்-2 .....



எனக்கு ஞாபகம் தெரிந்த அடுத்த காதல் ஜோடி வீரபத்ரன் - ஆர்த்தி

வீரபத்ரன் என்னுடைய பத்தாவது வகுப்பு பள்ளித்தோழன். தினமும் நான் - வீரபத்ரன் - பாலகுமார் - ராஜா என்று பள்ளி முடிந்ததும் ஒன்றாக சைக்கிளையும், விழிகளையும், தாவணித்தேவதைகளை பின்தொடர்ந்து உருட்டியபடி பேசிக்கொண்டே வந்து கொண்டிருப்போம்.

வீரபத்ரன் - விஜயகாந்தின் நிறத்தில் ஆறடி உயரத்தில் இருப்பான். அவனது தந்தை திருமண வீட்டிற்கு பந்தல் கட்டும் வேலை செய்து வருபவர்.

ராஜா - எனக்குத்தெரிந்து பாளையங்கோட்டையிலிருந்து எங்கள் ஊருக்கு படிக்க வந்த முதல் மாணவன். அவனது தந்தை அரசாங்க அலுவலகர்

பாலகுமார் - புளியங்குடி பக்கத்தில் இருந்து வந்து எங்கள் ஊரில் அவனது உறவினர் வீட்டின் மாடியில் தங்கிப் படிப்பவன். அந்த வீட்டின் எதிர்வீடுதான் ஆர்த்தியின் வீடு. அவளும் எங்கள் பள்ளியில்தான் படிக்கின்றாள்

தினமும் பள்ளி முடிந்து நடந்து வரும்பொழுது ஆர்த்தி தனது சக தோழிகளுடன் எங்களின் பேச்சுக்கள் எட்டும் தூரத்தில் நடந்து சென்று கொண்டிருப்பாள். எப்படித்தான் லவ் பத்திக்சோ தெரியாதுங்க..அப்பல்லாம் எனக்கு விவரம் தெரியாத வயசு..அட நம்புங்க..உண்மைதான்.. :)

அடிக்கடி வீரபத்ரனும் ஆர்த்தியும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொள்வது, தூரத்தில் சென்ற பிறகு கைகாட்டிவிட்டு விடைபெறுவது, இதெல்லாம் காதல்தான்னு எனக்கு அன்னிக்கே தெரியாதுங்க..

ஆனால் பாலகுமாரனும், வீரபத்ரனும் ஒருவருக்கொருவர் எங்களை விட்டுவிட்டு ரகசியம் பேசிக்கொள்வார்கள். வீரபத்ரன் அடிக்கடி பாலகுமாரைப் பார்க்க அவன் தங்கியிருக்கும் வீட்டிற்குச் செல்வான். “ஏன்னா எதிர்வீட்டுலதானே அவனோட தேவதை தங்கியிருக்கு”

ராஜா கூட என்னிடம் சந்தேகமாய் கேட்பான். “ஞானி என்னடா வீரபத்ரனும் பாலகுமாரனும் ஏதோ இரகசியமா பேசிக்கிறாங்கடா..என்னன்னு தெரியல..”

ராஜா கொஞ்சம் உஷார் பார்ட்டி. கண்டுபிடித்து என்னிடம் சொல்லிவிட்டான். “டேய் ஞானி! வீரபத்ரனும் ஆர்த்தியும் லவ் பண்றாங்கடா..”

எனக்கு பயங்கர ஷாக். ராஜா என்னிடம் அந்த விசயத்தை சொன்ன பிறகு காதல் என்ன நிறம்..? எப்படியிருக்கும்..? அது வந்தால் என்ன ஆகும்..? எப்படி வருகிறது? என்பதை எல்லாம் 2 நாட்கள் தூக்கத்தை தொலைத்து அலசியிருக்கின்றேன்.

நெருங்கியவர்கள் மரணமடையும்பொழுது நமக்கும் மரணம் உண்டு என்று ஒரு பயம் வருமே அதுபோல நெருங்கிய நண்பனின் காதல் என்னையும் கிளர்ச்சியடையச்செய்தது மட்டுமின்றி காதல் பற்றிய முதல் அறிமுகத்தையும் தந்தது.

எனக்கு வீரபத்ரனிடம் கேட்பதற்கு தயக்கம். ஆகவே பாலகுமார் வீட்டிற்குத் தேடிச்சென்று விசயத்தை கேட்டேன். அவன் முதலில் பயத்தில் மறுத்தான் பின் உண்மையை உளறிவிட்டான்.

மறுநாள் வழக்கம்போல நாங்கள் பள்ளி முடிந்து வந்துகொண்டிருக்கின்றோம். எனக்கு அப்பொழுது வீரபத்ரனும் ஆர்த்தியும் மட்டுமே தனியாய்த் தெரிந்தார்கள். சினிமாவின் கதாநாயகர்கள் கதாநாயகிகள் எல்லாம் ஞாபகத்தில் வந்து போயினர்

காதலித்துப்பார்
பார்க்கும் படத்திலெல்லாம்
நீயே கதாநாயகன்
அவளே கதாநாயகி
அவள் தந்தையே வில்லன்

பத்தாம் வகுப்பு இறுதிப்பரிட்சை நெருங்கியது. தமிழ் பரிட்சை அன்று காலையில் பள்ளிக்கு வரும்பொழுதே அந்த அதிர்ச்சியான தகவல் வந்து சேர்ந்தது.ம் அதான்ங்க..நம்ம வீரபத்ரன் இருக்கான்ல..அவன் ஆர்த்தியை கூட்டிட்டு ஓடிப்போய்ட்டான்பா..எனக்கு ஆச்சரியமாகவும் பயமாகவும் இருந்தது. எந்த நம்பிக்கையில் அவர்கள் ஓடிப்போயினார்கள் என்ற ஆச்சரியமும் வீரபத்ரன் ஓடிப்போன செய்தியைப்பற்றி நம்மிடம் விசாரிப்பார்களோ என்ற பயமும் அதிகமாகியது.

நல்லவேளை அவர்கள் ஓடிப்போன செய்தியைப்பற்றி பாலகுமார் பள்ளி நிர்வாகத்திடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் சொல்லிவிட்டதால் நான் தப்பித்தேன்.

பிறகு இரண்டு நாள் கழித்து அவர்கள் தூத்துக்குடியில் அகப்பட்டுக்கொண்டார்கள்.

வீரபத்ரன் சிறையில் அடைக்கப்பட்டு ஒருவாரம் கழித்து இருதரப்பினர்களுக்கும் சமாதானம் பேசப்பட்டு வெளியில் விடப்பட்டான்.

எங்கே போனார்கள்? எங்கு தங்கினார்கள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரிக்கும் பக்குவம் அந்த பயமான சூழ்நிலையில் எனக்கு தோன்றாமல் போயிற்று.

பின் அந்த ஆர்த்தியை பக்கத்திலுள்ள அவர்களின் மாமா வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

கொஞ்ச நாள் கழித்து வீரபத்ரனை ஊரில் சில இடங்களில் எங்கேயாவது கண்டால் நான் ஒதுங்கி போக ஆரம்பித்தேன். அவனது தந்தையின் பந்தல் செய்யும் தொழிலில் அவன் பிசியாகிவிட்டான். எங்கேயாவது கண்ணில்பட்டால் என்னைக்கண்டு ஒரு புன்சிரிப்பு சிரிப்பான். அவ்வளவுதான்.

சமீபத்தில் கூட நான் விடுமுறையில் ஊரில் இருந்தபொழுது ஒரு தெருவில் பந்தல் போட்டுக்கொண்டிருந்தவனை அழைத்துச் சென்று அவனுடைய நலம் - தொழில் நிலைமை எல்லாம் விசாரித்துச் சென்றேன்.அவனுக்கும் கல்யாணம் ஆயிடுச்சுங்க..நல்லபடியா இருக்கான்..

அந்த ஆர்த்தியும் ஒரே ஒரு தடவை அவர்கள் தெருவை கடந்துசெல்லும்போது பார்த்தேன். கல்யாணம் முடிந்து உடல் குண்டாகி முக அடையாளமே மாறிப்போய்விட்டாள். அவளுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. இல்லை தெரியாதது போல் நடித்திருப்பாள் என்று நினைக்கின்றேன்.

எனக்கு என்ன தோன்றியது என்றால் அந்தச் ஆர்த்தியின் திருமணத்தில் நம்ம வீரபத்ரன் பந்தல் போட வந்தால் எப்படியிருந்திருக்கும். இதே சூழ்நிலை சினிமாவில் வந்திருந்தால் ஒரு சோக பாட்டை எடுத்து விட்டிருக்கலாம்.

இவன்
பந்தலையெல்லாம்
பக்குவமாய்தான் போட்டான்
ஆனால் தன்
காதலைத்தான்
கந்தலாக்கிவிட்டான்........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கண்ணால் கண்ட காதல் சம்பவம்-1 .....



கல்லூரியில்,படித்துக்கொண்டிருந்தபொழுது என் நண்பன் இன்னொரு பிரிவைச்சார்ந்த அமி என்ற பெண்ணின் மீது அவனுடைய காதல் வகுப்புத் தோழிகளின் ஆதரவுகளோடு அமோகமாக வளர்ந்தது.

முதலில் அந்தப் பெண்ணின் பெயரை காதலிக்க ஆரம்பித்தான். பின் அவள் உயிரைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான்.அவளின் பிறந்தநாளுக்கு கவிதைகள் வாழ்த்து அட்டைகள் ரோஜாப்பூக்கள் என களை கட்டியது.


- காதல்
வாழ்த்து அட்டை வியாபாரியை..
வாழ வைக்கிறது!
ரோஜாப்பூக்களை..
குடிசைத்தொழிலாக்குகிறது!

அந்தப்பெண்ணனின் வீட்டிற்கு சென்று அவளது தாயாரின் கருணையையும் மதிப்பையும் பெற்று சுமுகமாய் வளர்ந்த அந்தக்காதல் கடைசியில் அந்தப்பெண்ணிற்கு வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளையின் வடிவில் வந்தது அவர்களது காதலின் எதிரி.


"நீ நாங்கள் சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ளவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் " என்று அவர்களது பெற்றோர் மிரட்டினார்களா என்று தெரியவில்லை ஆனால் அந்தப்பெண் கடைசியில் மனசு மாறிவிட்டாள்.

நாங்களும் கடைசி வரை போராடினோம் . அந்தப்பெண்ணின் உறவினர் ஒருவரிடம் அந்தப்பெண்ணிற்கு விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்கள்தான் கட்டாயப்படுத்துகிறார்கள் என்று நிலைமையை விளக்கி அந்த உறவினரையும் அழைத்துச் சென்று எல்லோர் முன்னிலையிலும் கேட்கும் பொழுது
"அவனை நான் காதலிக்கவே இல்லை ச்சும்மா ப்ரண்ட்சிப்தான்" என்று சொல்லிவிட்டாள்.
அந்தக்கடுப்பில்தான் நான் எழுதினேன் ஒரு கவிதை..

காதல் யாரையும் ஏமாற்றுவதில்லை
ஆனால்
காதலிகள்தான்..


அதன் பிறகுதான் உணர்ந்தேன். அவனது காதலி அவனை ஏமாற்றிவிட்டதற்காக எல்லோரையும் நாம் குறைகூறக் கூடாது என்று. எத்தனையோ காதலர்கள் காதலித்து பெண்களை ஏமாற்றிவிட காதலிகள் - காதலன் வீட்டுமுன் போராட்டம் என்று எத்துணை செய்திகளில் படித்திருக்கின்றோம்

கடைசியில் எனது நண்பன் எனக்கு ஒரு கடிதமும் தனது காதலிக்கு கொடுத்து விடவேண்டும் என்று ஒரு கடிதமும் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்ய முயன்று தூக்க மாத்திரைகளை விழுங்கிவிட்டான். நல்லவேளை அவனது தாய் உடனே கவனித்து விட்டதால் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றி விட்டார்கள்.

தற்கொலையைப்போல
இழிவான செயல் எதுவுமில்லை
ஆகவே
காதலிக்காதீர்கள்

பின்னர் தந்தையின் சுடுசொற்களுக்கு இடையேயும் சமுதாயத்தின் பழிசொற்களுக்குpடையேயும் தடுமாறி போராடி வெற்றி பெற்று தற்பொழுது சென்னையில் வெப் டிசைனராக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான். உலக நாடுகளிலிருக்கும் பல நிறுவனங்களுக்கு Freelancer webdesigner - ஆக பணிபுரிந்து கொண்டிருக்கின்றான்.

என்னால் இன்னமும் மறக்கமுடியாது என்னிடம் அவன் இப்படி புலம்பியதை :

"டேய் அவ இப்பவும் விதவையாய் வந்தால் கூட நான் ஏற்றுக்கொள்வேன்டா.."

'பாருங்க..எந்த அளவுக்கு அந்தப் பெண்ணை காதலித்திருப்பான் அவன்.? ஆனால் இப்படி ஏமாத்திட்டுப் போயிட்டாளே அவள்..'

அதுவும் நல்லதுக்குத்தான். இறைவன் ஒரு சோகத்தை கொடுத்து கெட்டவர்களையும் நல்லவர்களையும் எனது நண்பனுக்கு அடையாளம் காட்டிவிட்டான்.

காதலிக்கு கல்யாணம்
இவன்
காதல் விதவையானது

எனது நண்பன் ஜகூபாவுக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. என்ன ஒரு ஆச்சர்யமென்றால் எந்தப் பெயரை விரும்பி அந்தப்பெண்ணைக் காதலித்தானோ அதே பெயருள்ள பெண்ணே இவனுக்கு மனைவியாக அமையப்போகின்றாள்.

செங்கோட்டையைப் பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூரில் செட்டிலான ஒரு குடும்பத்தில் இருந்து அவன் விரும்பிய பெயர் கொண்டவளே உயிர் நிரப்ப வரப்போகிறாள். இப்போது அவளோடு இணையத்தில் இதயத்தை தொலைத்துக்கொண்டிருக்கின்றான்.

ஆனால் நான் இன்னமும் எனக்குள் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன். எவ்வளவு தீவிரமாய் எனது நண்பனைக் காதலித்த அந்தப்பெண் கடைசி நேரத்தில் மனம் மாறிய காரணம் என்ன..? பலவந்தமா இல்லை பணபந்தமா?

பெயரைக் காதலித்து - அவளின்
உயிரைக் காதலித்தான்
அவளோ
பெயருக்கு காதலித்துவிட்டு
உயிரைப் பறிக்க நினைத்தாள்.........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

!!**காதல் கடிதம்**!!



இதயம் என்னும் பேனாவால்
இன்று எழுதிகிறேன் ஓர் கடிதம்
என் உயிர் காதலனுக்கு……………………..!

*

எழுதுகின்ற வார்த்தகள் கூட
கவிதையாய் என் முன் தோன்றுதடா
உன் பெயரை எழுதிய பின்
வேறு எப்படி இருக்கும்………………………..!

*

என் மடலில் உயிர் உள்ள எழுத்துக்கள்
உன்னிடம் சேர்ந்தவுடன்
உயிர் விட கேட்குமடா…………………..!

*

என் உணர்வுகள் ஒவ்வொண்றும்
வார்த்தகளால் எழுதிகின்றேன்
பார்த்தவுடன் கிளிக்கதே
பார்த்துவிட்டு கிளித்துவிடு………………!

*

உன்மீது காதல் கொண்டது நானில்லை
நீ என்மீது கொண்ட காதல்
உண்மையென நம்பியது என் மனம்……………!

*

இன்றும் பொய்யாகவில்லை உன்
காதல் – என் தாய் தந்தைக்காய்
என்னை விட்டு செல்கிறாய்………………!

*

என்னை வெறுத்து நீ செல்லவில்லை
என் உயிரை உன்னோடு
எடுத்தே செல்கிறாய்…………………….!

*

இன்று நீ எப்படியோ தெரியாது
ஆனால் என் மனம் உன்னை
நினைக்காமல் இங்கில்லை…………………..!

*

காலம்  தான் பிரித்தாலும் – கடவுள்
கூட கண் திறந்து பார்க்கவில்லை
நம் காதலுக்காய் வரம் கூட தடவில்லை……………..!

*

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் வாழும்....



காதல் விளக்கு மாதிரித்தான்
ஏற்றுவதற்கு
தீப்பந்தம் எடுத்து வந்தது
என் தவறு தான் - அதற்காக
தீபத்தை அணைக்க
தீயணைப்பு படையா - வேண்டமடி

தீ அழாகாகும் இடம் தீபம்தான்
வாழ்க்கை அழாகாகும் இடம் காதல்தான்

தீபம் ஏற்றுவது பக்தனின் விருப்பம்
ஏற்பதும் ஏற்காததும் கடவுளின் விருப்பம்
இல்லாளக நீ என்பது என் விருப்பம்
இருப்பாயா இல்லையா என்பது உன் விருப்பம்

கடவுள் ஏற்கவில்லை என்றாலும்
நெய் இருக்கும் வரையில் தீபம் வாழும்
நீ இல்லை என்றாலும் - என்
மெய் இருக்கும் வரையிலும் காதல் வாழும்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அழகே நீ.....



சில நாட்களாகவே
கனவில் வந்து
கலகம் செய்கிறாய் ...
தெரு முனையில் உன்னை
ஓர் நாள் தாவணியில்
பார்த்த நினைவுதான்
மனதில் பசுமையாய்
இருக்கிறது ....
குண்டு கமலாவோடும்
ஒல்லி சரசுவோடும்
சேராதே ...
அவர்களை பார்த்தாலே
எரிச்சலாய் இருக்கிறது
ஜீன்சும், சுடிதாரும்
போட்டுகொண்டு
பயமுறுத்துகிறார்கள் ...
கூடவே எப்போதும்
நைட்டி ...
உன்னை பிடித்திருக்கிறது
நீ தாவணி அணிவதால் ........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன் தாவணி....



ஊரெங்கும் சுட்டெறிக்கும் வெயில்
எங்கிருந்தோ ஒரு தென்றல்
உரசிச் சென்றது
திரும்பிப் பார்த்தேன்
அவளின் தாவணி.

உன் தாவணிகள்
ஏன் இவ்வளவு அழகாயிருக்கிறது தெரியுமா?...
நீ எந்த வண்ணத்தில் உடுத்திருந்தாலும்
நீ பூசுகிற வெட்கத்தின் வண்ணத்தை
அணிந்து கொள்கின்றன!!!...

இறுகக் கட்டியிருக்கிறாய் என்பதால் மடடுமல்ல
உன்னை கட்டியிருக்கிறோம்
என்கிற கர்வத்தில்
அழகாயிருக்கிறது தாவணி...

பாவாடை தாவணியில் வெளியே வரும்பொழுதில்
அவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிறாயா
கவலையை விடு
உன்னை தழுவுகிற சுகத்தை விட்டு
அவை நழுவி விடமாட்டா...

உன்னைத் தீண்ட முடியாத கோபத்தில்
காற்று தாவணியோடு மல்லுக்கட்டுவதைப்பார்த்து
புன்னகைக்கிறது உன் கூந்தல் பூக்கள்
அவையிரண்டையும் பார்க்கையில்
தவிக்கும் என்னைப்பார்த்து
குறும்பாக சிரிக்கிறது
என் காதல்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் தோற்றதாய் கதைகள் ஏது?........



உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம் .

நினைவுகளாலே நிச்சயதார்த்தம் நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை ஏற்பது பெரும்பாடு
ஒருபுறம் தலைவன் மறுபுறம் தகப்பன் இருகொல்லி எருபானால்
பாசத்துக்காக காதலை தொலைத்து ஆலையில் கரும்பானால்
யார் காரணம் ..? யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தால் கண்ணீராலே
சுற்றம் செய்த குற்றம் தானே
உயிரில் பூக்கும் காதல் உணர்வின் ஆழ்நிலை
உணர்வை பார்பதேது உறவின் சூழ்நிலை

மனமெனும் குளத்தில் விழி என்னும் கல்லை முதல் முதல் எறிந்தாலே
அலை அலையாக ஆசைகள் எழும்ப அவள் வாசம் விழுந்தானே
நதி வழி போனால் கருவற கூடும் விதி வழி போனானே
விதை ஓன்று போட வேறொன்று முளைத்த கதை என்று ஆனானே
என் சொல்வது என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்கும் என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல் உடனே ஜெயித்தது
வலிகள் தாங்கும் காதல் மிகவும் வளியது
காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தத்பர்த்தம்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

கடவுளின் காதலி....



நீ கண்கள் மூடி
வேண்டிக்கொள்வதால் தான்,
கடவுள் இன்னும்
கடவுளாகவே இருக்கிறார்.

#

அதென்ன?
நீ ஏற்றும்
தீபங்கள் மட்டும்
காற்றை
அணைத்து விடுகின்றன.

#

சம்மதம் வாங்க போராடுகிறார் பூசாரி.
‘என்னை கட்டிக்கொள்கிறாயா?’
என நீ கேட்கிறாயா?
பலியாடாக நான் தயார்.

#

தெப்பக்குளத்தில் கால் நனைக்காதே!
மீன் இனம்
சர்க்கரை நீரில் வாழ
இன்னும் பழகவில்லை.

#

திருவிழாவில்
உன் வீட்டார் வடம் இழுக்க,
நீ மட்டும்
என் இடம் இழுத்தபடி
நடப்பதேனோ?

#

நிதமும்
கனவில் நீ வரும்
இரவுகளுக்காக பிராத்திக்கிறார்
கடவுள்.

#

‘ஐயோ’வுக்கு அடுத்து
யார் பேரை அதிகம் சொல்கிறாய்
என்கிற போட்டி நிலவுகிறது
கடவுள்களுக்குள்.

#

திருவிழாவுக்காக இல்லை,
எல்லோரும்
நீ வார்க்கும் பாலை மட்டும்
பிரித்துக் குடிக்கும்
அன்னப்பாம்பை
பார்க்க வந்தவர்கள்.

#

காதல் அழிவதில்லை…...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாவணி காதல்.....



தாள் இல்லை,
கவிதை எழுத
தாவணி கேட்டால் முறைக்கிறாய்.
கவிதை சுமக்கும் தாவணி
கொஞ்சம் கவிதை சுமந்தால்
தவறொன்றும் இல்லை.

*

கொடியில் காயும்
உன் வெள்ளை தாவணிக்கு
சகதுணிகளுக்கு மத்தியில்
பூ போட்ட தாவணி என்கிற
அடையாளம் கிடைத்துவிட்டது.

*

உன் வெட்கத்தை பார்த்த
முதல் தாவணியும்,
என் வெட்கத்தை பார்த்த
முதல் வேட்டியும்
ஒன்றாய் உலர்கையில்
வெட்கப்பட்டனவே!
கவனித்தாயா?

*

பூப்போட்ட தாவணி அழகென்றேன்.
முந்தானையால் கண் கட்டிவிட்டாய்,
சத்தியமாய் தாவணியைத்தான் சொன்னேன்.
நம்பாவிட்டாலும் பரவாயில்லை
கட்டை மட்டும் அவிழ்த்துவிடாதே!

*

தொலைந்த தாவணியை
வீணாய் தேடாதே!
எனதறையில் பத்திரமாய்
நம் காதலை
அதில் தான்
தூளியிட்டிருக்கிறேன்.

*

அத்தை சொல்லச்சொல்ல கேளாமல்
சாயம் போகும்
உன் புது தாவணியோடு
என் சட்டையை ஊறவிட்டு
கறை படுத்திக்கொண்டேனே
அன்றிலிருந்து தான்
காதலிக்கவும் ஆரம்பித்தேன்.

*

எனக்காக கிழிக்கப்பட்ட தாவணிகளின்
கணக்கு பார்க்க வேண்டும் என்கிறாய்.
பொறு…
உன் தாவணித்துண்டுகளுக்காக
பட்டுக்கொண்ட காயங்களை
எண்ணிச்சொல்கிறேன்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஹைக்கூ.......



1.
நான்கு வருடமும்
நான்கு நொடியாகியது
கல்லூரியின் இறுதி நாள்.

2.
மறந்துவிட்ட பழைய
காதலின் எண்ணங்கள்
சன்னோலரப் பேருந்துப் பயணம்.

3.
மேனிதொடும் வெளிநாட்டின்
மழைத்தூறல் நிணைவெங்கும்
ஊரிலிருக்கும் குழந்தையின் ஸ்பரிசம்.

4.
அப்பாவின் கண்ணில்
ஆனந்தக் கண்ணீர், எனக்கு
வேலை கிடைத்து விட்டது.

5.
இரவு நீண்டுகொண்டே
இருக்கிறது, கையில்
கொடுக்கவிருக்கும் காதல் கடிதம்.

6.
தொலைபேசி அருகிலேயே
தாய், விமானத்தில்
நான்.

7.
தெருவில் வீட்டின் தூரம்
உணரவைக்கிறது அடக்கமுடியாத
செறித்துவிட்ட தண்ணீர்.

8.
சீக்கிரம் வந்துவிட்ட தந்தை
அரைப்பரீட்சையில் தேராத
மதிப்பெண் அட்டையுடன் நான்.

9.
எப்படி சொல்வது
தனிக்குடித்தனம் போவதை
உடம்பு சரியில்லையாவென கேட்கும் தாய்......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதலித்தோம்.......



1.
என்னருகிலிருந்து
நாட்களை நிமிடங்களாக்கிக்
கொண்டிருக்கும்
காலதேவன் நீ!

2.
கன்னத்தில் ஒட்டியிருந்த
தூசியை எடுக்க எனது
கைவிரல்கள் பட்டதும்
கண்டு கொள்ளாதவள் போல் நீயும்
கவனிக்காதவன் போல் நானும்
இருந்தாலும் இருவரின்
இதயத் துடிப்புகளும்
இரண்டு மடங்கானது உண்மை.

3.
எப்பொழுதுமே
என்னை அடித்துவிட்டு
நீதான் சினுங்குகிறாய்.

4.
உனக்காகவும் சேர்த்து
நானே காதலித்த
என் காதல்
பாதியாகி விடுமோ
எனத் தயங்குகிறேன்
நீயும் காதலிக்க ஆரம்பித்துவிட்டாயே!

5.
காலச் சுருக்கங்களின்
கலக்கங்களாகவே போகிறது
காதலியே நீ
கைகுலுக்கிப் பிரியும் பொழுது.

6.
உச்சி வெயில்
சுடவில்லையா என்கிறாய்,
நிலவின் மடியிலல்லவா இருக்கிறேன்!

7.
குளத்திலும் கல்லெறிந்து
விளையாடுகிறாய்
என் மனதில் காதலெறிந்தது போல.

8.
எவ்வளவோ
பேசியிருந்தாலும்
இரு கண்களும்
ஒரே நேரத்தில் சந்திக்கும்பொழுது
மவுனம் மட்டுமே நிலவுகிறது.

9.
நான் உன்னைத் தூக்க
வேண்டும் என்பதற்காகவே
எட்டாத உயரத்திலிருக்கும்
பூவைப் பறிக்கத் துடிக்கிறாய்.

10.
காதலிக்கிறேன் என்பதை என்
காதுக்குள் மட்டுமே சொல்லு,
இல்லையென்றால்
காற்றும், இந்தக் கடலும்
உன்னுடனேயே வந்துவிடப் போகிறது.

11.
காதல் படம்
பார்க்கலாமென்கிறாய்,
பேய்ப் படம்
பார்க்கலாமென்கிறேன்.
அப்பொழுதுதானே என்னை
அள்ளி அனைத்துக் கொள்ளுவாய்.

12.
ஏனோ தெரியவில்லை
என்னுடன் இருக்கும்போது மட்டும்
இடி, மின்னலுக்குப் பயப்படுகிறாய்!

13.
எத்தனையோ இரவில்
குச்சியை வைத்து
உன் வீட்டு வாசலில்
தட்டிச்சென்று இருக்கிறேன்
கூர்கா போல.

14.
உன் மடியில்
படுத்துக்கொண்டே
நட்சத்திரங்கள் எண்ண வேண்டும்
எண்ணி முடிக்கும் வரை
உன் மடியிலேயே இருக்க வேண்டும்.

15.
இன்று பௌர்ணமி
என்கிறாய்.
என்னருகில் நீ இருக்கும்
பகல் கூட எனக்கு அப்படித்தானே!...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாவணி தேவதை......




எல்லோரும் மழைநேரத்தில்
வானவில்லைப் பார்க்க
வானம் பார்த்து நிற்க
தாவணியோடு நீ
தரைதொட்டுத் தவழுவதைப்
பார்த்து வானவில்லென்று கத்திவிட்டேன்!

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

பாவாடைச் சட்டைகளில்
குறும்புகளை ஓரங்கட்டிவிட்டு
தாவணிக்கு நீ தாவியதும்
தவழ்ந்து வந்தது வெட்கம்

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

மொட்டை மாடியில்
மழை நனைக்குமுன்
துணிகளை எடுக்க வந்த
நாமிருவரும் முதன்முதலாய்
சந்தித்த போது நனைந்தது
மழையால் துணியும்
காதலால் மனமும்

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

நீ அவ்வப்பொழுது
நழுவிடும் தாவணியை
சரி செய்துவிடும் போதெல்லாம்
சரிந்து விழுகிறேன் நான்

~~~~~^^^^^~~~~~^^^^^~~~~~

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

எப்போது காதல் வந்தது.....



எண்ணிப் பார்க்கிறேன் நான், எப்போதடி
உன் மேல் எனக்குக் காதல் வந்ததென்று
என்னை மிகவும் பிடிக்கும் என்றாயே
அப்போதுன்மேல் காதல் வந்ததா...
என் மேல் இவ்வளவு அக்கறை காட்டுகிறாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
வசீகரமான உன் முகத்தைப் பார்த்த நாளன்று
உன் மேல் கண்டதும் காதல் வந்ததா...
எனக்குப் பிடித்ததெல்லாம் உனக்கும் பிடித்திருக்கிறதே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
என் தாயை 'அம்மா' என்றழைத்தாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
என் நலனுக்காக நீ வேண்டிக்கொண்டாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
என் வேலையில் நீ எனக்கு உதவினாயே
அப்போதுன் மேல் காதல் வந்ததா...
இல்லையடி இல்லை.
என் விருப்பத்திக்கேற்ப நீ நடந்த போதெல்லாம்
உன் மேல் காதல் வரவில்லை
உன் விருப்பத்திக்கேற்ப நானும் இருக்க
வேண்டும் என்றெண்ணிய போது உணர்ந்தேனடி
உன் மேல் எனக்கு காதல் வந்ததென்று..........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அம்மா......

அம்மா.
உன்னை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்குள்
நேசநதி
அருவியாய் அவதாரமெடுக்கிறது.

மழலைப் பருவத்தின்
விளையாட்டுக் காயங்களுக்காய்
விழிகளில் விளக்கெரித்து
என்
படுக்கைக்குக் காவலிருந்தாய்.

பசி என்னும் வார்த்தை கூட
நான் கேட்டதில்லை
நீ
பசியை உண்டு வாழ்ந்திருக்கிறாய் .

என் புத்தகச் சுமை
முதுகை அழுத்தி அழுதபோது
செருப்பில்லாத பாதங்களேடு
இடுப்பில் என்னை
இரண்டரை மைல் சுமந்திருக்கிறாய்.

அகரம் அறிமுகமான ஆரம்ப நாட்களில்
அன்பின் அகராதியை எனக்கு
அறிமுகப் படுத்தியது
என் தலை கோதிய உன் விரல்களல்லவா ?

எனது சிறு சிறு வெற்றிகளுக்கு
கோப்பைகள் கொடுத்தது
உனது
இதயத் தழுவலும்
பெருமைப் புன்னகையுமல்லவா ?

வேலை தேடும் வேட்டையில்
நகர நெரிசல்களில் கீறல் பட்ட போது
ஆறுதல் கரமானது
உனது ஆறுவரிக் கடிதமல்லவா ?

எனக்கு வேலை கிடைத்தபோது
நான் வெறுமனே மகிழ்ந்தேன்
நீதானே அம்மா
புதிதாய்ப் பிறந்தாய் ?

உனக்கு முதல் சம்பளத்தில்
வாங்கித்தந்த ஒரு புடவையை
விழிகளின் ஈரம் மறைக்க
கண்களில் ஒற்றிக் கொண்டாயே
நினைவிருக்கிறதா ?

இப்போதெல்லாம்
என் கடிதம் காத்து
தொலை பேசியின் ஒலிகாத்து
வாரமிருமுறை
போதிமரப் புத்தனாகிறாய்
வீட்டுத் திண்ணையில்.

எனக்கும்
உன் அருகாமை இல்லாதபோது
காற்றில்லா ஓர் வேற்றுக் கிரகத்துள்
நுழைந்த வெறுமை.

போலியில்லா உன்முகம் பார்த்து
உன் மடியில் தலைசாய்த்து
என் தலை கோதும் விரல்களோடு
வாழத்தான் பிடித்திருக்கிறது எனக்கும்

இந்த
வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் தான்
வலுக்கட்டாயமாய்
என் சிறகுகளைப் பிடுங்கி
வெள்ளையடிக்கின்றன.........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காத்திருத்தல்.....

காத்திருப்பது சுகம் என்று
மீராவுக்கு தெரிந்திருக்கிறதாம்..
காக்க வைப்பது பாவம் என்று
கண்ணனுக்கு ஏன் தெரியவில்லை?......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

யார் நீ? .......

எங்கிருக்கிறாய்… என்னவளே….
யார் நீ?
எப்படி இருப்பாய்?
ஒல்லிக்குச்சியா?
பூசணிக்காயா?
பனைமரமா?
குள்ளக் கத்தரிக்காயா?

ஆனால்
நிச்சயமாய் கேள்விக்குறிகளின்
நிரந்தரப் பதிலாய்…
பெண்ணாய்,
பெண்ணியத்தோடு…

தோள்களில் சாய்ந்தும்,
தலைமுடியைக் கோதியும்,
மூக்கோடு மூக்கை உரசியும்,
என் உயிரைப் பிழியப்போகின்றாய்…

தனிமையை…
அழுகையை…
அன்பை…
ஆண்மையை….
முழுமையாய் ஆக்கிரமிக்கப் போகின்றாய்..

நம் சிசுவை வயிற்றிலும்,
உன் நினைவுகளை என் இதயத்திலும்
பாரமின்றி நிரப்பப்போகின்றாய்…

நினைக்க… நினைக்க
இனித்தாலும்…

தொட்டிக்குள் நீந்தும்
மீனைப் போல

உன்னையே சுற்றும் என்
கற்பனைத் தாளில்

ஏனோ நீ மட்டும்
விவரிக்கப்படாத விபரமாய்…

நானோ கிறுக்கப்படாத
வெற்றுக் காகிதமாய்…

முகம் தெரியாத உனக்காக,
முகவரி இடப்படாத
வாழ்த்து அட்டைகள்,
பரிசுப் பொருட்கள்…
கூடவே நானும்.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதலை எப்படி சொல்ல......

என் காதலை உன்னிடம்
எப்படிச் சொல்வது?

காதலுடன் பேசக்
காட்டாற்று வெள்ளமாய்க்
கரைபுரண்டு வந்த கவிதைகள் உன்
கண்களைக் கண்டதும் கானலாகின.

சொல்ல நினைத்துத் துடித்தவை
சொப்பனத்தில் கண்டனவாய்க் கலைந்து விட்டன.

ஒத்திகை பார்த்து வந்த வசனங்களும் உன்
ஓரவிழிப் பார்வைக்கு முன்னே ஓடியே விடுகின்றன.

கண்டவுடன்
கதவுக்குப் பின் மறையும் உன்னைக்
காண மனது துடித்தாலும்
பண்பாடு தடுக்கிறது;
என் பாடு சொல்ல வழியில்லையே?

சொல் பெண்ணே!
என் காதலை உன்னிடம்
எப்படிச் சொலவது?......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆனாலும் புடிச்சிருக்கு.....

"எழுதி எழுதி
என்னத்த கண்ட?"
மனசாட்சி என்னைக் கேட்டாலும்
எண்ணத்தில் உள்ளதை எல்லாம்
எழுதிக் குவிக்கின்றேன்.
உள்ளுக்குள் போராட்டம்
ஓராயிரம்.
ஆனாலும் புடிச்சிருக்கு
அவளைப் பற்றி எழுதுவதற்கு.....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

க(னவு) விதை....

காதலித்தால் கவிதை வருமாம்
உண்மையோ நானறியேன்
ஒன்று மட்டும் சொல்வேன் நான்
க(னவு) விதை என்று

காதலனும் காதலில் தோற்றவனும்
புதிய, பழைய கனவுகளை மீட்க
பண்படுத்திய இதய மண்ணிலே
விதைக்கின்ற விதைகள்தான் இது

சில வேளை அழகு என்ற கறையானும்
வசதி என்ற எறும்புகளும்
குடும்பம் என்ற நத்தையும்
க(னவு)விதைகளை நாசம் செய்யும்

அப்போதே விடடுக்கொடுக்க தயாராக
உங்கள் கைகளிலே ஏந்துங்கள்
நீங்கள் கனவுலகில் பெற்றெடுத்த உங்கள்
அன்புக் குழந்தையை மட்டும்

அது மட்டுமே உங்களுக்கு சொந்தம்
மற்றதெல்லாம் மாறிவிடும்
சந்தர்ப்ப சூழ்நிலை என்ற
வெள்ளப் பெருக்கினால்.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் கண்ணீர்....

பொங்கல் வைத்து
படையலிட வருகிறாய்;
அய்யனார் கையில்
பூ!

உன் பார்வை பற்றவைத்தது;
உருகி உருகி
எரிகிறது உயிர்!

என் கண்ணீர்
துளிகளால்;
உனக்கு வைரமாலை!

உன் அறை
உன் பிம்பம்
என் கோவில்
என் சாமி!

மூங்கில் காடு புகும்
காற்று அழுது திரும்புகிறது;
உன் நினைவில் அரற்றும்
எனைப் போலவே!.......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காதல் கவிதை....

நிஜம் என்று சொல்வதா
நிழல் என்று கூறுவதா


பதினான்கில் பறந்து கண்டேன்
பதினாறில் ஒன்றாய் கண்டேன்


நான் சொல்ல கேட்கவில்லை
நு நினைக்க பார்க்கவில்லை


காலம் கடந்து சென்றாலும்
கனவின் முகம் மாறவில்லை

நீ நிலவென்று குறவில்லை
நித்திரையில் காண தடையுமில்லை


நாளை வரை காத்திருப்பேன்
நான்கில் சொல்லத்தான் கொண்டுவ்ந்தேன்....

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஒரு பசுவின் மனு.....

என்னைப் பார்த்துத்தானே
கூறினீர்கள் ...
தாயை அம்மா என்று !

பெற்ற தாயே தன்
சிசுவுக்குப் பால்தர மறுக்கும்
இக்காலத்தில்-நான்
மறக்கவில்லையே உங்களின்
சிசுவுக்குப் பால் தர !

காய்ந்த தீவனம்,
வடிகட்டிய நீர்,
மிஞ்சிய சாதம்,
இப்படி உன்னில் எஞ்சியதையே
எனக்கு நீ அளித்தாலும்
உனக்கு நான் அளிப்பது
சுத்தமான கலப்படமில்லா பால் தானே !

என்னில் ஊசி மருந்து செலுத்தி
என் ரத்தத்தை உறிஞ்ச
எவர் கொடுத்தார் உனக்கு அதிகாரம்?
ஏனிந்த பேராசை !

என்னில் செலுத்தும்
ஒவ்வொரு ஊசியும் உன்னைப்
பெற்றவளின் மார்புக் காம்பில்
செலுத்துவதற்குச் சமம்.

நானாகக் கொடுத்தால்
பால்.
நீ ஊசியால் கறந்தால்-அது
என் ரத்தம்.

வேண்டாம் மகனே!
நானே விரும்பிக் கொடுக்கிறேன்
வாழும் வரை !

என்னை வீழ்த்தித் தான்
குடிப்பேன் என்றால் அது
பாலல்ல....விஷம் ...........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உன் கவிதையை நீ எழுது.....

உன் கவிதையை நீ எழுது
எழுது
உன் காதல்கள் பற்றி
கோபங்கள் பற்றி
எழுது

உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக் கொள்ள
விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப்
புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி
நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை
வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட
விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட
முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது

எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை
என்றால்...

ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன்
எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாரை வார்க்கப்பட்ட தமிழினம்.........

குப்பை மேடுகளாய் குவிகிறது தெருவோரம்
ஆதரவு இல்லாமல் பல்லாயிரம் தமிழ் பிணங்கள்

ஈழத்தில் நடக்கும் தமிழன படுகொலைகள்
உலகமெல்லாம் தெரிகிறது
இங்கிருக்கும் தமிழகத்தில்
என்னவென்றே தெரியவில்லை

தமிழகம் கைவிட்டதால்
தமிழினமே அழிந்தது
தமிழன் என்ற உணர்விழந்து
பிழை ஒன்று செய்தது

உலகெங்கும் தமிழ் சொந்தம்
நம்மை கேள்வி கேட்ட்குது
உணர்வுள்ள நெஞ்சமெல்லாம்
தலை குனிந்து நிற்குது

பாதுகாப்பு வளையதுக்குள்ளே
கொத்து குண்டு வீசிகிறான்
பாதுகாப்பு சபைகள் எல்லாம்
பார்த்துக்கொண்டு இருக்குது

அடக்கம் செய்ய சொந்தம் இன்றி
அனாதைகளாய் மடிகின்றான்
கேள்விகேட்க நாதிஇன்றி
சொந்த நாட்டில் சாகிறான்

சிங்களனின் சூழ்ச்சிஇனில்
உலக நாடு வீழ்ந்தது
வீரமிக்க தமிழினமே
உலக வரைபடத்தில் அழிந்தது

தமிழகத்து தமிஜினமாய்
நடமாடும் பிணங்களாய்
நாமிருந்து என்ன பயன்
சொரணை கேட்ட ஜென்மமாய்

ஆட்சிகட்டிலில் அமர்ந்து கொண்டே
லட்சம் கொலைகள் செய்கிறான்
லட்சியத்திற்காக வாழ்ந்த இனத்தை
தடை விதித்தே அழிக்கிறான்

வாழ்ந்த இனம்
வீழ்ந்த கதை
நம் சந்ததிகள் படிக்குமே

தமிழினத்தை தாரை வார்த்த
தமிழகத்தை ஏசுமே
செத்ததெல்லாம்
பிணங்களல்ல
சொரணை உள்ள தமிழினம்

நேசம் காட்ட உறவிருந்தும்
தாய் மண்ணுக்காக வீழ்ந்திட்டான்
தேசம் காண நினைத்த இனம்
வேரறுந்து நிற்குது

இனமொன்று வாழ்ந்தது
தன்னுரிமைக்காக எழுந்தது
உலக நாடு தடை விதித்ததால்
வழியின்றி வீழ்ந்தது

நம்பியிருந்த சொந்தமெல்லாம்
நடுத்தெருவில் விட்டது
உலகம் செய்த துரோகத்தினை
நினைத்து நெஞ்சம் சுட்டது

மிச்ச மீதி உள்ள தமிழன்
அடிமை விலங்கை உடைத்திடுவான்
சிங்களனக்கு அடிபணிந்து
தமிழ் புலிகள் வாழாது..........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சுகப் பிரசவம்!......

“வலி வரலைன்னா
சொல்லும்மா சிசேரியன்
பண்ணிடலாம்”
-கேட்ட மருத்துவரிடம்,
வேண்டாமென மறுத்துவிட்டேன்!

பெத்தவருக்கு தான்
பெருஞ்செலவு ஆகுமென்று!

வலியை வரவழைக்க
வலிய முயன்றேன்!

எனிமா ஏற்று
குடலை சுத்தமாக்கி,

புடவை அவிழ்த்து
இரவுடை தரித்து,

முக்கத் தொடங்கினேன்
கட்டிலில் படுத்து!

பற்றிக்கொள்ளத் துணையைத் தேடி
கட்டில் கம்பியைப் பற்றிக்கொண்டு,
விழிகளைப் பிதுக்கி,
பல்லைக் கடித்து,
அடிவயிறு உப்பி,
கால்களை உதறி,
முக்கி முக்கி,
உந்தி உந்தி
தள்ளுகிறேன் ஓர் உயிரை,
உலகைக் காண!

முகமெல்லாம் வியர்த்து,
உடல் தளர்ந்து,
உள்ளமும் சோர்ந்து,

உள்ளே, செத்துப்
பிழைத்தேன், நான்!

வெளியே, சொன்னார்கள்:
“சுக“ப் பிரசவம் என்று!.........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS